இன்று வெளியாகிறது பா ரஞ்சித்தின் அடுத்த பட டிரைலர்!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:23 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த படமாக நட்சத்திரம் நகர்கிறது ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான தென்மா இசையமைக்கிறார். வழக்கமாக ரஞ்சித் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பேசப்படும். இந்த முறை நட்சத்திரம் நகர்கிறது படம் முழுக்க முழுக்க காதலை பேச உள்ளதாக பா ரஞ்சித் கூறியுள்ளார்.

இதையடுத்து இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments