Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் நையப்புடை

பா.விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் நையப்புடை
, திங்கள், 2 நவம்பர் 2015 (13:13 IST)
ஒழுங்காக பாடல் எழுதிக் கொண்டிருந்தால் இந்நேரம் வைரமுத்துக்கு டஃப் பைட் கொடுத்திருக்கலாம். நடிக்கிறேன் என்று வழக்கி விழுந்த பா.விஜய் இதுவரை அதிலிருந்து எழவில்லை.
 
பா.விஜய் நடித்த எல்லா படங்களும் தோல்வியடைய, அவரே கதை எழுதி நடித்து ஸ்டராபெரி என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படமும் சரியாகப் போகவில்லை. அவரது முகத்தில் எமோஷனை விடுங்கள்... எந்த மோஷனுமே இல்லை என்று பத்திரிகைகள் எழுதின. இருந்தாலும் ஆசை ஒரு விடாத கருப்பு.
 
நையப்புடை என்ற புதிய படத்தில் பா.விஜய் நடிக்கிறார். இதில் அவரது தந்தையாக நடிப்பது எஸ்.ஏ.சந்திரசேகரன். விக்ரம் விஜய் என்ற அறிமுக இயக்குனர் நையப்புடையை இயக்குகிறார். தாணு தயாரிப்பு.
 
நையப்புடை ரசிகர்களை புடைக்காமல் இருக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil