Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவில் நல்ல இசையும் இல்லை, நல்ல பாடகர்களும் இல்லை: பி.சுசீலா வேதனை..!

Mahendran
சனி, 27 ஜூலை 2024 (13:23 IST)
தமிழ் சினிமாவில் நல்ல இசையும் இல்லை, நல்ல பாடகர்களும் இல்லை என பழம்பெரும் பாடகி பி சுசீலா வேதனையுடன் தெரிவிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இன்றைய தமிழ் சினிமாவில் நல்ல இசை இல்லை, நல்ல பாடகர்களும் இல்லை, கோடம்பாக்கம் தூங்குகிறது. இதை பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது, என்று பி சுசீலா கூறியுள்ளார்.
 
மேலும் அந்த காலத்து பாடல்கள் போல் எப்போதும் வராது என்றும் எம்எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் ஆகியோர் இசையமைப்பாளராக இருந்த காலத்தில் ஸ்டூடியோக்களில் நுழைந்தாலே பாட்டு மட்டும் தான் ஒலிக்கும் என்றும் இப்போது அப்படி இல்லை என்றும் பாடகி பி சுசீலா தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய பாடல்களில் சத்தம் மட்டும் தான் அதிகமாக இருக்கிறது, நல்ல கருத்துள்ள பாடல் வரிகளோ, இனிமையான இசையோ இல்லை என்று ரசிகர்கள் பலர் குற்றச்சாட்டு கூறிவரும் நிலையில், பி சுசீலாவும் கிட்டத்தட்ட அதே கருத்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சுசிலாவின் இந்த கருத்தை அடுத்து தற்போதைய இசையமைப்பாளர்கள் தங்கள் பாணியை மாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments