Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டங்கள் !

சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டங்கள் !
, திங்கள், 25 மே 2015 (15:16 IST)
சினிமா கவிஞர்களுக்கு சர்வதேச அப்போஸ்தல பல்கலைக் கழகம் டாக்டர் பட்டங்களை வழங்கியது.

சர்வதேச அப்போஸ்தல பல்கலைக்கழகம் (இந்தியா மற்றும் அமெரிக்கா) கல்விப்பணி, அறப்பணி போன்றபல்வேறு நலப்பணிகளையும் செய்து வருகிறது. இப்பல்கலைக்கழகம் இன்று கல்வி, கலாச்சாரம், இயற்கை வளம். சமூகமேம்பாடு, எழுத்துப் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியது.

இன்று பாம்குரோவ் ஓட்டலில் நடந்த விழாவில் டாக்டர் பட்டங்களை திரைப்படப் பாடலாசிரியர்கள் ப்ரியன், அண்ணாமலை, 7லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்த கடலூர்  வனவியல் அலுவலர் சி.கொளஞ்சியப்பா, 150 நூல்கள் எழுதிய எழுத்தாளர் பி.பி.சிவசுப்ரமணியம், மனிதநேயச் சேவையாளர் பிரம்மாரெட்டி ஆகியோருக்கு செவாலியர் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் நீதியரசர் டாக்டர் கே.ஞானப் பிரகாசம் முன்னிலையில் பிரதம பேராயர் கார்டினல் டாக்டர் எஸ்.எம் ஜெயக்குமார் வழங்கினார்.

விழாவில் பேசிய நீதியரசர் தொல்காப்பியம் முதல் இன்றைய இலக்கியம் வரை தொட்டுப் பேசி வாழ்த்தினார். அவர் பேசும் போது 

" பேரறிஞர் அண்ணா வாடிகன் சிட்டி சென்று போப் ஆண்டவரைச் சந்தித்தபோது கோவா சிறையிலிருந்த ரானடேயை விடுவிக்கச் சொன்னார். அதுவும் போர்ச்சுகீசிய அரசால் சிறையில் அடைக்கப்படிருந்த ரானடேயை விடுவிக்கச் சொன்னார். அப்போது போப் ஆண்டவர் 'அவன் உங்கள் ஊரா உறவா? உங்களுக்கு என்ன உறவு ?'என்று  கேட்டார் .  'ஊருமில்லை உறவுமில்லை .அவன் மனிதன் மனித நேயத்தால் கேட்கிறேன்' என்றார் அண்ணா. 

நமக்குள் இனம் மொழிகள் பேதங்கள் இருக்கலாம் வெறுப்பு மட்டும் கூடாது .நாம் எல்லாரும் மொழியால் மதத்தால் பிரிக்கப் பட்டிருந்தாலும் மனித நேயத்தால் ஒருமைப் பட்டு இருக்கிறோம். " என்றார்.

விழாவில்டாக்டர் பட்டம் பெற்ற ப்ரியன் பேசும்போது." நான் சினிமா ஆர்வத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்தேன் வந்த எனக்கு சென்னையே புதிது .சினிமா புரியவில்லை பாட்டு எழுத யாரைப் பார்ப்பது என்ன செய்வது என்று தெரியவில்லை. கதவு தட்டிய இடங்களில் எல்லாம் புறக்கணிப்புகள், நிராகரிப்புகள் ,அவமானங்கள் தான் பரிசாகக் கிடைத்தன. ஆற்றுப்படுத்த ஆள் இல்லை. வழிகாட்ட வழியில்லை. உதவி செய்ய ஒருவருமில்லை இதனால் பல நாட்கள் வீணாயின .எனக்கு நம்பிக்கை இருந்தாலும் குடும்பத்திலும் மகன் வீணாகி விட்டானே என்று வருத்தப் பட்டனர்.  அப்படி நம்மைப் போல் யாரும் தவிக்கக் கூடாது என்கிற நோக்கத்தில்தான் திரைப்பாக்கூடம் தொடங்கினேன். பல திரைக்கவிஞர்களை உருவாக்கி இருக்கிறேன். 8 பேர் பாடல் எழுதியிருக்கிறார்கள்.

கவிதை கற்றுக் கொடுத்து வராது .ஆனால் திரைப்பாடல் பயிற்றுவித்து வரும். சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டால் பாடல் எழுதுவது வரும். என் திரைப்பாக் கூடத்தின் மூலம் 200 விண்ணப்பங்களில் 24பேர் தேர்வு செய்து அதில் 17பேர் சினிமா அனுபவம் எதுவுமே இல்லாதவர்களை மெட்டுக்குப் பாடல் எழுத வைத்தேன்.பயிற்சி அளித்தால் பாடல் எழுதுவது வரும் என்று நிரூபித்து இருக்கிறேன்.நான் சுமார் 400 பாடல்கள் எழுதினாலும் என்மூலம் பயிற்சி பெற்றவர் எழுதும்போது வருகிற மகிழ்ச்சி திருப்தி தனி. அதற்காக இந்த பட்டம் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
 ''என்றார். 

விழாவில் பி.கே.இளமாறன், மீடியா பாஸ்கர், கவிஞர் ஆனந்தராஜ். டாக்டர்  எத்திராஜ் ஆகியோரும் பேசினார்கள். மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களையும் பேராயர் டாக்டர் எஸ்.எம் ஜெயக்குமார் வழங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil