Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணன் படத்துக்காகக் காத்திருக்கிறேன்… பிசி ஸ்ரீராம் டிவீட்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (12:12 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் படத்துக்காக தான் காத்திருப்பதாக ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஆகியோரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ‘லேபில் கிடைத்த சிறு இடைவெளியில் மாரி செல்வராஜ் மற்றும் தேனி ஈஸ்வர் ஆகியோரோடு ஒரு உரையாடல். பரியேறும் பெருமாள் என் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் கர்ணன் படத்துக்காக காத்திருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குணச்சித்திர நடிகர் ரவிகுமார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

திடீரென தள்ளிப்போன ‘இட்லி கடை’! குட் பேட் அக்லி வைப்தான் காரணமா?

அஜித்தின் 'குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது? சுரேஷ் சந்திரா அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. இன்று ஒரே நாளில் ரூ.1280 குறைவு..!

பாரதிராஜாவை பாட்டு பாடி சோகத்தில் இருந்து மீட்கும் கங்கை அமரன்… இணையத்தில் பரவும் நெகிழ்ச்சியான வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments