Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

vinoth
திங்கள், 31 மார்ச் 2025 (09:18 IST)
மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் தொடக்கத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் சிலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சில இந்து அமைப்புகள் இதில் உள்ள சில காட்சிகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, உடனடியாக படக்குழு 17 இடங்களில் காட்சிகளை வெட்டவும், வசனங்களை ம்யூட் செய்யவு ம் முடிவெடுத்தது.

மேலும் நடிகர் மோகன்லால் ““லூசிபர்” படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படத்தின் கருத்து மற்றும் தயாரிப்பு குறித்து சில அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் எழுந்துள்ளன. இது சிலருக்கு மனவருத்தம் கொடுத்திருப்பதை நான் புரிந்துகொண்டேன். ஒரு கலைஞராக, எந்த ஒரு மதத்தையோ, அரசியல் சிந்தனையோ எதிர்ப்பதற்காக நான் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க மாட்டேன். அது என் கடமை. அதனால், ‘எம்புரான்’ படத்தில் உள்ள சில காட்சிகள் எதிர்ப்பை உருவாக்கியதால், அதை நீக்குவதற்கான முடிவை எடுத்து விட்டோம்.” எனக் கூறி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்தக் காட்சிகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது குறித்து தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “குற்றவுணர்வுதான் அவர்களை(எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை) இப்படி எதிர்வினையாற்ற வைக்கிறது. அதனால்தான் அந்தக் காட்சிகளை நீக்குமாறு அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அதன் மூலம் தங்களுடைய குற்றவுணர்வு குறையும் என அவர்கள் நினைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments