Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் வின்னர் ஓவியா தான்: அடித்து சொல்லும் பிரபல நடிகர்!

பிக் பாஸ் வின்னர் ஓவியா தான்: அடித்து சொல்லும் பிரபல நடிகர்!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (14:51 IST)
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வெற்றி பரிசை நடிகை ஓவியா தன் தட்டிச்செல்வார் என பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


 
 
நடிகை ஓவியா தமிழக ரசிகர்களின் ஒட்டுமொத்த இதயத்தையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கொள்ளையடித்துள்ளார். அவரது வெளிப்படையான அனுகுமுறை, தைரியமான போராட்டக்குணம், யாரைப்பற்றியும் புறம் பேசாமல் இருக்கும் பண்பு என அவரது நடவடிக்கைகளால் அனைவரது இதயத்திலும் இடம் பிடித்துவிட்டார்.
 
இதனால் தான் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அவரை எலிமினேஷனுக்கு நாமினேட் பன்னும் போதும் ரசிகர்களின் பேராதரவால் அதிகப்படியான மக்கள் ஆதரவை பெற்று தொடர்ந்து நிகழ்ச்சியில் நீடித்து வருகிறார். அவர் தான் இதில் வெற்றி பெறுவார் என பலரும் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் நடிகை ஓவியா குறித்து பெருமைப்பட்டு பேசியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓவியாதான் வெற்றி பெறுவார் எனவும் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் பேசியதாவது, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் நடத்தையை வைத்து பார்க்கும் போது ஓவியா தான் இந்த போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அந்த பெண் வாழ்க்கையை மிக எளிதாக எடுத்துக்கொள்கிறார்.
 
அவரை முகத்துக்கு முன்பாக மற்றவர்கள் திட்டும் போது கூட புன்னகையுடன் தோளை குலுக்கிக்கொண்டு சென்று விடுகிறார். அவர் அழும் போது கூட எல்லார் முன்னிலையிலும் அழாமல் தனியாகச் சென்று தான் அழுகிறார். மற்றவர்களை போல டிராமா செய்வதில்லை என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொன்ன முதல் ஆள் நான்தான்… இப்போ தனுஷுக்கும்…– DSP வாழ்த்து!

கண்ணப்பா படத்தில் பிரபாஸ் எவ்வளவு நேரம் வருவார்?... வெளியான தகவல்!

மும்பையில் மூன்று மாதங்கள் முகாமிடும் அட்லி& அல்லு அர்ஜுன் படக்குழு!

மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!

ராம்சரணுக்குத் தோல்விப் படம் கொடுத்ததற்காக வருந்துகிறேன் – தில் ராஜு மனம் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments