Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை பின்னுக்கு தள்ளிய ஓவியா: பிரதமராக 86 சதவீதம் பேர் ஆதரவு!

மோடியை பின்னுக்கு தள்ளிய ஓவியா: பிரதமராக 86 சதவீதம் பேர் ஆதரவு!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (13:54 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பேரின் இதயங்களை வென்று அந்து நிகழ்ச்சியில் இருந்து மன அழுத்தம் காரணமாக வெளியேறியவர் நடிகை ஓவியா. இவருக்கு இணையத்தில் ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சிப்படை, ஓவியா பேரவை என மிகப்பெரிய ஆதரவு வட்டம் உள்ளது.


 
 
ஓவியாவை தங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்ட இவர்கள் சில குறும்புத்தனமான விஷயங்களிலும் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு ஓவியா ரசிகர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
சமூக வலைதளமான டுவிட்டரில் ஓவியா பக்தன் என்ற பெயரை கொண்ட ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அதில் பிரதமர் மோடி, நடிகை ஓவியா, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது.


 
 
இந்த கருத்துக்கணிப்பில் இந்தியாவின் பிரதமராக ஓவியாவிற்கு 86 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளார். அதில் ஓவியா பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளியுள்ளார். அவருக்கு 10 சதவீதம் பேரும் ராகுல் காந்திக்கு வெறும் 4 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். இதனை பலரும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய காமெடி நடிகை ஆர்த்தியும் இந்த ஸ்கிரீன் ஷாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments