Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுகே, ஆஸ்திரேலியா, மலேசியாவில் தமிழ்ப் படங்களின் வசூல் நிலவரம்

யுகே, ஆஸ்திரேலியா, மலேசியாவில் தமிழ்ப் படங்களின் வசூல் நிலவரம்
, திங்கள், 29 ஜூன் 2015 (15:00 IST)
தமிழ் சினிமாவுக்கு இது மோசமான நேரம். வெளியாகிற பத்து படங்களில் ஒன்பது தோல்வியை தழுவுகிறது. மீதமுள்ள ஒன்றும் உள்காயங்களுடனே உயிர் தப்புகிறது. வெளிநாடுகளிலும் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.
 

 
சென்ற வார இறுதியில் யுகே மற்றும் அயர்லாந்தில் வடிவேலுவின் எலி, ஒரு காட்சியில் வெறும் 292 பவுண்ட்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் யுகே மற்றும் அயர்லாந்த் வசூல் 9.59 லட்சங்கள் மட்டுமே.
 
நாம் சொன்ன பத்தில் ஒன்று, ரோமியோ ஜுலியட். இந்தப் படம் யுகே மற்றும் அயர்லாந்தில் சென்ற வார இறுதியில் 325 பவுண்ட்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் மொத்த வசூல், 36.07 லட்சங்கள். ஜெயம் ரவியின் படத்துக்கு இது தாராளமான வசூல்.
 
ஆஸ்திரேலியாவிலும் எலி வெளியானது. நேற்றுவரை எலியின் ஆஸ்திரேலியா வசூல், 5.67 லட்சங்கள் மட்டும்.
 
மலேசியாவில் எலி நேற்றுவரை, 10.73 லட்சங்களை வசூலித்துள்ளது. இங்கு ரோமியோ ஜுலியட்டின் வசூல் அபாராம். நேற்றுவரை இதன் மலேசிய அறுவடை 1.58 கோடி.

Share this Story:

Follow Webdunia tamil