Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் ஆபரேசன் திருட்டு டிவிடி

விஷாலின் ஆபரேசன் திருட்டு டிவிடி

Webdunia
புதன், 25 மே 2016 (13:08 IST)
பல வருடங்களாக திரையுலகம் போராடிக் கொண்டிருந்தாலும் விஷால் களத்தில் குதித்த பிறகே திருட்டு டிவிடி குறித்த விழிப்புணர்வு தமிழ் திரையுலகில் மேலோங்கியது.


 


திரையில் கெத்து காட்டிக் கொண்டிருந்தவர் தெருவில் இறங்கி நாலைந்து திருட்டு டிவிடி விற்பனையாளர்களை போலீஸில் பிடித்துக் கொடுத்ததோடு நிற்காமல் தனது நண்பர்கள், ரசிகர்களை ஒருங்கிணைத்து நெட்வொர்க் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். 
 
சென்னையில் இருக்கும் விஷாலால் இந்த நெட்வொர்க் காரணமாக மதுரை, சேலத்தில் திருட்டு டிவிடி விற்றவர்களை போலீஸில் சிக்க வைக்க முடிந்திருக்கிறது. அங்கு மட்டும் ஒரு லட்சம் திருட்டு டிவிடிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. திருட்டு டிவிடி தயாரித்து வந்த கணினிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 
 
இதன் மதிப்பு மட்டும் கால் கோடி வருகிறது. மதுரையிலும், சேலத்திலும் திருட்டு டிவிடி தயாரிக்கும் கும்பல் சிக்கியுள்ளது. மேலும், திருட்டு டிவிடிகள் விற்பனை செய்கிறவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
திருட்டு டிவிடி என்ற கடலின் ஒரு சிறு பகுதிதான் இது. மொத்த திரையுலகமும் கைகோர்த்தால் மட்டுமே திருட்டு டிவிடியை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
 
அப்படியே அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகளையும் விஷால் போலீசில் காட்டிக் கொடுத்து நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். செய்வீங்களா... நீங்க செய்வீங்களா...?
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கவேண்டும்- நீதிமன்றம் உத்தரவு!

பிரதீப் ரங்கநாதனின் ‘டயூட்’ படத்துக்கு ஓடிடியில் இவ்வளவு பெரிய டிமாண்ட்டா?

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments