Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அரசு மீது உதயநிதி வழக்கு

தமிழக அரசு மீது உதயநிதி வழக்கு

தமிழக அரசு மீது உதயநிதி வழக்கு
, புதன், 4 மே 2016 (11:11 IST)
உதயநிதியின் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதில்லை என்பதில் அரசும், வரிவிலக்கு பரிந்துரை குழுவும் உறுதியாக உள்ளன.


 


கெத்து படத்தின் பெயர் தமிழ் கிடையாது என்று நிராகரித்தனர். ஆனால், கெத்து தமிழ் வார்த்தைதான் என்று உதயநிதி நீதிமன்றத்தில் உறுதி செய்த பின்பும் வரிவிலக்கு அளிக்காமல் ஸ்டே வாங்கியுள்ளனர்.
 
மனிதன் படத்தின் தலைப்பும் தமிழ் கிடையாது என வரிவிலக்கு பரிந்துரை குழு கூறியுள்ளது. அதையே காரணம் காட்டி வரிவிலக்கு அளிக்க அரசு மறுத்துள்ளது. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளார் உதயநிதி.
 
ஏவிஎம் மனிதன் என்ற பெயரில் ஏற்கனவே படம் எடுத்துள்ளது. அவர்கள் அந்தப் படத்திற்கு வரிவிலக்கு பெற்றுள்ளனர். ஏற்கனவே வரிவிலக்கு பெற்ற ஒரு படத்தின் பெயரை தமிழ் இல்லை என்று நிராகரித்துள்ளனர். 
 
எனவே வரிவிலக்கு பரிந்துரை குழு மற்றும் தமிழக அரசு மீது வழக்கு தொடர உள்ளேன் என்றார் உதயநிதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிரத்னம் படத்தில் விமானியாக நடிக்கும் கார்த்தி