Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி பிறந்தநாளில் லிங்கா, கமல் பிறந்தநாளில் உத்தம வில்லன்

ரஜினி பிறந்தநாளில் லிங்கா, கமல் பிறந்தநாளில் உத்தம வில்லன்
, ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (13:46 IST)
ரஜினியின் பிறந்தநாளில் லிங்கா படத்தை வெளியிட இருப்பது போல் கமலின் பிறந்தநாளில் உத்தம வில்லனை வெளியிட முடிவு செய்துள்ளது திருப்பதி பிரதர்ஸ்.

உத்தம வில்லன் படத்தை முடித்துவிட்டு பாபநாசம் படத்தில் நடிக்க போய்விட்டார் கமல். உத்தம வில்லனின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. செப்டம்பர் 10 படம் வெளியாகும் என்று முதலில் கூறியிருந்தனர். அது சாத்தியமில்லை. தீபாவளிக்கு ஐ, கத்தி உள்பட பல படங்கள் மோத உள்ளன. அதனால் தீபாவளிக்கும் படம் வரப்போவதில்லை.

தற்போது நவம்பர் 7 கமலின் பிறந்தநாள் அன்று உத்தம வில்லனை வெளியிட திருப்பதி பிரதர்ஸ் முடிவு செய்துள்ளது. டிசம்பர் இறுதியில் அல்லது 2015 ஜனவரியில் விஸ்வரூபம் 2 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil