Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒக்கடோச்சாடு... இது விஷால் படத்தின் பெயர்

ஒக்கடோச்சாடு... இது விஷால் படத்தின் பெயர்

ஒக்கடோச்சாடு... இது விஷால் படத்தின் பெயர்
, புதன், 27 ஜூலை 2016 (17:39 IST)
ஒக்கடோச்சாடு... அப்படீன்னா என்ன என்று பயப்பட வேண்டாம். கத்திச்சண்டை படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு  வைத்திருக்கும் பெயர்தான் இது.


 
 
சண்டக்கோழி படம் காரணமாக விஷாலுக்கு தெலுங்கிலும் சின்னதாக மார்க்கெட் இருக்கிறது. அவரது படம்  தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகும். சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துவரும்  கத்திச்சண்டை படமும் தெலுங்கில் வெளியாகிறது. தெலுங்கு தயாரிப்பாளர் ஹரி படத்தை ஆந்திரா  தெலுங்கானாவில் வெளியிடுகிறார்.
 
கத்திச்சண்டை படத்தில் வடிவேலு மீண்டும் காமெடியனாக நடித்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பை முடித்து  அக்டோபரில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவி வெளியீட்டு தேதி அறிவிப்பு