Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்… வைரலாகும் போஸ்டர்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:05 IST)
தெலுங்கில் உருவாகி வெற்றி பெற்ற பெல்லி சூப்ளு படத்தின் தமிழ் ரீமேக்காக ஓ மணப்பெண்ணே உருவாகி வருகிறது.

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டாவைக் கவனிக்க வைத்த திரைப்படம் பெள்ளி சூப்ளு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உடனே அதன் ரீமேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கினார்.

தன்னுடைய தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற பெயரில் படத்தின் போஸ்டர்களையும் வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பின்னர் இப்போது அதே படத்தைதான் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே! "கூலி" திரைப்படத்தின் கொண்டாட்டம்

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்? சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என பதிவு..!

கூலி டிக்கெட் முன்பதிவு.. 1 மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலா?

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments