Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ்ஸில் கலக்கும் ஓ காதல் கண்மணி

யுஎஸ்ஸில் கலக்கும் ஓ காதல் கண்மணி
, திங்கள், 20 ஏப்ரல் 2015 (13:19 IST)
இயக்குனர்களில் வெளிநாடுகளில் அதிக ரசிகர்களும், வரவேற்பும் உள்ளது மணிரத்னத்துக்கே. அவரது படங்கள் யுஎஸ்ஸில் மிகுந்த வரவேற்புடன் ஓடும். ராவணன், கடல் போன்றவைகூட நல்ல ஓபனிங்கை பெற்றன.
 

 
ஓ காதல் கண்மணியின் யுஎஸ் விநியோக உரிமையை வாங்கியிருந்தது, பிரைம் மீடியா. அவர்கள்தான் படத்தை யுஎஸ்ஸில் வெளியிட்டனர். படத்தின் தமிழ் பதிப்பு வெளியான இரு தினங்களில் 175,795 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் சுமார் 1.10 கோடி. தெலுங்குப் பதிப்பு முதல் இரு தினங்களில் 73,360 யுஎஸ் டாலர்களை தனதாக்கியுள்ளது. ரூபாயில் சுமார் 45.89 லட்சங்கள்.
 
சமீபத்திய மணிரத்னம் படங்களில் ஓ காதல் கண்மணிக்கே அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil