Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாடுகளில் கலக்கும் ஓ காதல் கண்மணியின் வசூல் நிலவரம்

வெளிநாடுகளில் கலக்கும் ஓ காதல் கண்மணியின் வசூல் நிலவரம்
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (09:14 IST)
வெளிநாடுகளில் ஓ காதல் கண்மணி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்துக்கு 17 -வது இடம் கிடைத்துள்ளது. யுஎஸ்ஸில் ஓடிக் கொண்டிருக்கும் இந்தியப் படங்களில் இதற்குதான் முதலிடம்.
 

 
கடந்த வெள்ளியன்று யுஎஸ்ஸில் வெளியான படம், முதல் மூன்று தினங்களில் 175 திரையிடல்களில் 3.87 கோடிகளை வசூலித்துள்ளது. சமீபத்தில் எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இப்படியொரு வசூல் கிடைக்கவில்லை.
 
ஓ காதல் கண்மணியின் தெலுங்குப் பதிப்பு, ஓகே பங்காரம் யுஎஸ்ஸில் முதல் மூன்று தினங்களில் 39 திரையிடல்களில் 1.44 கோடியை வசூலித்துள்ளது.
 
கனடாவில் முதல் மூன்று தினங்களில் ஓ காதல் கண்மணி 3.01 லட்சங்களை தனதாக்கியுள்ளது. யுகே மற்றும் அயர்லாந்திலும் இப்படத்துக்கே இந்தியப் படங்களில் முதலிடம். முதல் மூன்று தினங்களில் 15 திரையிடல்களில் 46.13 லட்சங்களை வசூலித்துள்ளது. 
 
ஆஸ்திரேலியாவில் 50.98 லட்சங்கள், மலேசியாவில் 8.11 லட்சங்கள். தமிழகத்தைப் போலவே வெளிநாடுகளிலும் படம் அமோக வரவேற்பை பெற்றிருப்பதை இந்த வசூல் நிலவரம் காட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil