Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்கடுக்காக கண்டிஷன் போடும் நம்பர் நடிகை..

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (18:18 IST)
வரலாற்றுப் படத்தில் நடிக்க, ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறாராம் பெரிய நம்பர் நடிகை.


 

 
தெலுங்கில் எடுக்கப்பட்ட பிரமாண்ட சரித்திரப் படத்தைப் பார்த்து, அதேபோல் ஒரு படம் எடுத்தே தீரூவேன் என்று தொடைதட்டிக் கிளம்பியிருக்கிறார் பூ நடிகையின் கணவரான இயக்குநர். இந்தப் படத்தில், உலக நாயகனின் மூத்த மகள்தான் இளவரசியாக நடிப்பதாக இருந்தது. அதற்காக வாள் சண்டையெல்லாம் கூட கற்றுக்கொண்டவர், திடீரென அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார்.
 
எனவே, அடுத்து யார் இளவரசியாக நடிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரமாண்ட படத்தில் நடித்தவர் உடல் பெருத்துக் காணப்படுவதால், நம்பர் நடிகை தான் சரியானவர் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம் படக்குழு. ரசிகர்கள் கூட அவர்தான் இதற்குப் பொருத்தமாக இருப்பார் என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
 
அதனால், பூ நடிகையே பெரிய நம்பர் நடிகையிடம் பேசினாராம். படப்பிடிப்புக்கு முன்பே முழுக்கதையையும் என்னிடம் தரவேண்டும், சொன்ன தேதியில் சரியாக படப்பிடிப்பு நடக்க வேண்டும், இடையில் வேறு படங்களில் நடிக்க கால்ஷீட் வேண்டும், பல கோடிகள் சம்பளம் தரவேண்டும் என அண்ணாச்சி மளிகைக்கடை ரசீது போல கண்டிஷன்களை அடுக்கிக் கொண்டே போனாராம். அதிர்ச்சியான பூ நடிகை, கணவனிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments