Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் 27 நடிகர் சங்க பொதுக்குழு

நவம்பர் 27 நடிகர் சங்க பொதுக்குழு
, சனி, 5 நவம்பர் 2016 (15:09 IST)
நடிகர் சங்க பொதுக்குழு வருகிற 27-ந்தேதி சென்னையில் கூடுகிறது. இதில் பங்கேற்கும்படி நடிகர் சங்க உறுப்பினர்கள்  3 ஆயிரத்து 500 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. 

 
புதிய சங்க நிர்வாகிகள் மீது ஊழல் புகார், சங்க கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகோடு என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 27-ந்தேதி பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. நாடக நடிகர்கள் உள்பட மொத்தம் 3,500 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
 
தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் பிடிக்கும், ஆனால்... இலியானா சொல்லும் அனுபவப்பாடம்