Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சி நடனம் ஆடுவதில் தவறு இல்லை: நடிகை அஞ்சலி

கவர்ச்சி நடனம் ஆடுவதில் தவறு இல்லை: நடிகை அஞ்சலி
, திங்கள், 30 நவம்பர் 2015 (17:34 IST)
திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதில் தவறு இல்லை என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.


 
 
பிரபல நடிகர்கள் நடிக்கும் படங்களில் நடிகைகள் நடிக்க குறைந்த அளவு சம்பளம் தரப்படுகிறது ஆனால் பிரபல நடிகர்கள் நடிக்கும் படங்களில் நாயகிகள் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆட வேண்டும் என்றால் அதிகமான சம்பளத்தை தயாரிப்பாளர்கள் தருகின்றனர்.  
 
தமிழ் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகைகளின் வரிசையில் அஞ்சலி இருக்கிறார். ஏற்கனவே 'சிங்கம்2' படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டார். இதனை தொடர்ந்து இப்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘சரைனொடு’ என்ற தெலுங்கு படத்தில் அஞ்சலி ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார்.
 
திரைப்படங்களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவது குறித்து கருத்து தெரிவித்த அஞ்சலி "நான் மட்டுமல்ல.. பல முன்னணி நடிகைகளும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள். சினிமாவில் இப்போது இது சர்வ சாதாரணமாகி விட்டது. நான் கவர்ச்சியாக ஆடுவதில் தவறு இல்லை. இதனால் நான் நடித்து வரும் மற்ற படங்களுக்கு வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் வராது" என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil