Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து நடிக்கவில்லை- ''காந்தாரா'' பட ஹீரோ தகவல்

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (18:16 IST)
கன்னட சினிமாவின் சென்சேசன் இயக்குனராக உருவெடுத்துள்ள ரிஷப் ஷெட்டி, தன் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவை நடிக்கை வைக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகிறது.

டிகை ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது தவிர அவர் நடிப்பில் புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவில் தொடங்கிய அவரின் நடிப்பு இப்போது பாலிவுட் வரை நீண்டுள்ளது.

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். ஆனால் இப்போது அவருக்கு கன்னட சினிமாவில் தடை விதிக்க முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குக் காரணம் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணல்தான் என்றும், அதில் அவர் அறிமுகமான கன்னட படம் பற்றி அவர் அவமரியாதையாகப் பேசியதுதான் காரணம் என்று  கூறப்படுகிறது.
 

ALSO READ: கன்னட சினிமாவில் ராஷ்மிகாவுக்கு தடையா?... அதிர்ச்சி தகவல்!
 
இந்த  நிலையில், காந்தாரா பட ஹீரோ  ரிஷப்ஷெட்டி சமீபத்திய ஒரு பேட்டியில், ராஷ்மிகா மந்தனா உடன் நடிக்க மாட்டேன் என இலைமறைக்காயாக பேசியுள்ளார்.

ரிஷப் ஷெட்டியின் அடுத்த படத்தில் யார் ஹீரோயின் என செய்தியாளர்கள் கேட்டபோது, என் படத்திற்கு புதிமுக நடிகைகள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். எனவே முன்னணி நடிகையான ராஷ்மிகா அவரது அடுத்த படத்தில் இடம்பெற போவதில்லை  என்று கன்னட சினிமாவில் பேச்சு எழுந்துள்ளது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments