Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க கூட நேரமில்லாமல் பிஸியான நடிகை

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (16:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் தன்ஷிகா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘உரு’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
 
 
சமீபத்தில் வெளியான உரு கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு நடந்த இடம் கொடைக்கானல். டிசம்பர் மாதம் என்பதால், குளிர் பாடாய் படுத்தியது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்துவிட்டது. அடுத்து ‘காலக்கூத்து’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கும் ‘விழித்திரு’ படத்தில் வடசென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக நடித்திருக்கிறேன். 
 
‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் ‘சோலோ’ படத்தில் ஒரு பார்வையற்ற நடன கலைஞராக  நடித்திருக்கிறேன். இதில் எனக்கு ஜோடி துல்கர் சல்மான். எனக்கு சினிமாவிலும், வெளியிலும் காதல் இல்லை. உண்மையைச்  சொல்லப்போனால் அதற்கெல்லாம் நேரமில்லை என்பதுதான் உண்மை. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னட படங்களிலும்  நடிக்கிறேன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments