Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ஒருநாள் படப்பிடிப்பு ரத்து… விஜயகாந்த் மறைவையொட்டி தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (14:32 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். இதையடுத்து அவ்வப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்தமாதங்களில் அவர் உடல்நிலை மேலும் குன்றியது.

இதையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு சக திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத் தலைவராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ள விஜயகாந்தின் மறைவையொட்டி நாளை ஒருநாள் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments