Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24 படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் நித்யா மேனன்

24 படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் நித்யா மேனன்
, வியாழன், 30 ஜூலை 2015 (15:44 IST)
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும், 24 படத்தில் நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
24 படம் விக்ரம் குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சூர்யாவுக்கு இரு வேடங்கள். மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. 
 
இந்தப் படத்தில் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்னொரு நாயகியாக நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஃபேண்டஸி படமாக 24 தயாராகி வருகிறது.
 
பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நித்யா மேனன் நடிப்பதாக இருந்த சின்ன வேடத்தில் தற்போது சமந்தா ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil