Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரகத நாணயம் பார்ட் 2 வில் அவர் மட்டும் இல்லையாம்!

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (14:59 IST)
உருவாக உள்ள மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ் நடிப்பில், ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்த படம் ‘மரகத நாணயம்’. தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மொக்கை போடும் பேய்ப் படங்களுக்கு நடுவில், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது இந்தப் படம். அதனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி, வசூலையும் குவித்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரிடம் இருந்து அடுத்த படத்துக்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது தனது முந்தைய படத்தின் பார்ட் 2 வையே எடுக்க உள்ளாராம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். கௌபாய் ஸ்டைலில் இந்த படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த எல்லோரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளனராம். ஆனால் படத்தின் நாயகி நிக்கி கல்ராணி மட்டும் இந்த பாகத்தில் இல்லையாம். அவருக்கு பதிலாக வேறு கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கங்குவா… இடம்பெற்ற இந்தியக் குறும்படம்!

மிஷ்கினின் உளறல்களைக் கண்டித்த இளம் இசையமைப்பாளர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments