Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எழில் இயக்கத்தில் விஷ்ணு ஜோடியாகும் நிக்கி கல்ராணி?

எழில் இயக்கத்தில் விஷ்ணு ஜோடியாகும் நிக்கி கல்ராணி?
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (19:19 IST)
வெள்ளக்காரதுரை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எழில், விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ரொமான்டிக் காமெடியாக தயாராக உள்ள இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

 
டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நிக்கி கல்ராணி. அதன் பிறகு ஆதியின், யாகாராவாயினும் நாகாக்க படத்தில் நடித்தார். அப்படம் சமீபத்தில் வெளியானது. ஜீவாவின் கவலை வேண்டாம் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
எழில் இயக்கும் படத்திலும் அவர் நடிக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16  ஆம் தேதி தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil