Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர்-இயக்குனருக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (18:12 IST)
கடந்த ஆண்டு நடிகர் சசிகுமாருக்கு சோதனையான ஆண்டாக இருந்தாலும் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே அவர் ரஜினியுடன் நடித்த 'பேட்ட' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அவர் தற்போது 'நாடோடிகள் 2' உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்

தற்போது சசிகுமாரின் 19வது படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சசிகுமாரின் 19வது படத்தை கதிர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான நிக்கி கல்ராணி சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை ஆகும்

இந்த படத்தை . செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவும், சாபு ஜோசப், ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வியால் எழுந்த புரிதல்!

குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?

சூர்யா 45 படத்தின் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்!

இன்று வெளியாகிறது தனுஷின் ‘குபேரா’ டிரைலர்!

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments