Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு பிப்ரவரி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (10:31 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி 25ந் தேதி தேர்தல் நடந்தது.
 

 
 
2015 ஆம் ஆண்டு ஜனவரி 25ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்றது. தலைவராக எஸ்.தாணுவும், பொதுச்செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோரும், துணைத் தலைவர்களாக பைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்கள்.
 
இந்நிலையில் இந்த தேர்தலில் விஷால் ஒரு அணி அமைத்து போட்டியிடுகிறார். அவர் நடிகர் சங்கத் தலைவராக இருப்பதால் தலைவர் பதவிக்கு அவரது அணியில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜ் போட்டியிடுவார் என தெரிகிறது. விஷால் துணை தலைவருக்கு போட்டியிடலாம். இது தவிர ஜே.கே.ரித்தீஷ், ராதாரவி, சரத்குமார் இணைந்து ஒரு அணி அமைத்து போட்டியிட இருக்கிறார்கள். கலைப்புலி தாணு அணியும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

6 மாதங்களில் 450 கோடி முதலீடு.. யார் இந்த புதிய தயாரிப்பாளர்.. ஆகாஷ் பாஸ்கரன் குறித்த பரபரப்பு தகவல்..!

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments