Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ''கேப்டன் மில்லர்'' பட டீசர் பற்றிய புதிய அப்டேட்....வைரலாகும் போஸ்டர்

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (17:41 IST)
ஜூலை 28 ஆம் தேதி  ''கேப்டன் மில்லர்'' பட டீசர்  எப்போது வெளியாகும் என்று படக்குழு  அறிவித்துள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து  இயக்கி வரும் படம் கேப்டன் மில்லர்.  இப்படத்தை தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தென்காசி அருகே நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளுக்கு அடுத்த அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த  நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் “ஜூலை 28 சம்பவம் இருக்கு… கில்லர் கில்லர்” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று படத் தயாரிப்பு நிறுவனம் வரும் ஜூலை 28 ஆம் தேதி  கேப்டன் மில்லர் பட டீசர் வெளியாகும் என்று அறிவித்தது.

இன்று படக்குழு, வரும் ஜூலை 29 ஆம் தேதி அன்று, நள்ளிரவு 12.1 அதிகாலையில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், கேப்டன் மில்லன் படத்தின்  நடிகர்  தனுஷ் பட புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், துப்பாக்கியுடன்  பயங்கர ஆக்ரோசத்துடன் எதிரிகளை நோக்கி சுடுவது போன்ற இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

சாதரண கடைக்காரன்தான்.. ஆனா குடும்பம்னு வந்துட்டா..! - வீர தீர சூரன் திரைவிமர்சனம்!

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments