Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 61 படத்தின் புதிய அப்டேட்!!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (13:09 IST)
பைரவா படத்தை அடுத்து, விஜய் தனது 61-வது படத்தில் தெறி படத்திற்கு பிறகு அட்லியுடன் மீண்டும் இணைந்துள்ளார். 


 
 
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட 3 முன்னணி கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.
 
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். எடிட்டராக ஆண்டனி ரூபனும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணும் இப்படத்தில் இணைகின்றனர்.
 
மேலும், காமெடியனாக வடிவேலு மற்றும் சத்யன் விஜய்யுடன் இணைய உள்ளனர். இதை தவிர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர்.
 
எனவே, இப்படத்தில் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலம் விஜய் 61 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 
 
இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 2-ல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments