Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் ஷாருக்கான் மனைவி தொடங்கிய ரெஸ்டாரெண்ட்.. பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து..!

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (15:50 IST)
மும்பையில் ஷாருக்கான் மனைவி புதிய ரெஸ்டாரண்ட் திறந்து இருக்கும் நிலையில் பாலிவுட் பிரபலங்கள் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு பக்கம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மனைவி கௌரி கான் ஒரு மிகச்சிறந்த இன்டீரியர் டிசைனிங் கலைஞர் என்பதும் பல பாலிவுட் பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அவர்தான் இன்டீரியர் டிசைன் செய்து கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கௌரி கான் தற்போது தான் வசிக்கும் பாந்த்ரா என்ற பகுதியில் புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கி இருக்கிறார் ரெஸ்டாரன்ட் டோரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்ட்  திறப்பு விழாவுக்கு ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் 
 
மேலும் அவர் அளித்த பார்ட்டியில் கலந்து கொண்டிருந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் மும்பை மக்கள் தனது ரெஸ்டாரண்ட்க்கு வர வேண்டும் என்றும் தங்களுடைய உணவை சுவைக்க வேண்டும் என்றும் இன்ஸ்டாகிராமில் கௌரி கான் கோரிக்கை விடுத்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments