Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் புதிய செலபிரிட்டி; தீவிரம் காட்டும் பிக்பாஸ் !

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (11:39 IST)
பிக்பாஸில் நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகம். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்த ஓவியாவுகம், ஜூலியும்  வெளியேறிவிட்ட நிலையில் நிகழ்ச்சி டல் அடிக்க ஆரம்பித்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஓவியாவின் தனித்துவமான குணத்தினாலும், ஜூலியின் அழுவாச்சியை காமெடியாகவும் மக்கள் ரசித்து வந்தார்கள்.

 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடையிடையே சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம், காயத்ரியின் அலட்டல் நாடகம், வையாபுரியின்  புலம்பல் என நிகழ்ச்சி களை கட்டியது. ஓவியா, ஜூலி இல்லாத நிலையில் நிகழ்ச்சியை களைகட்ட வைக்க புதுவிதமாக  விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியும் நிகழ்ச்சியை கலகலப்பாக்க முயற்சிக்கிறார் பிக் பாஸ். ஆனாலும் ரசிகர்களை  ஈர்க்கவில்லை.
 
இதனை தொடர்ந்து வாராவாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் 3 பேரை சக குடும்ப உறுப்பினர்கள் மூலம் நாமினேட் செய்து  வந்தார் பிக்பாஸ். இந்நிலையில் இந்த வாரம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் (ரைசாவை தவிர) பிக்பாஸே நாமினேட்  செய்துள்ளார்.
 
இந்நிலையில், இந்த வாரம் அதிரடியாக ஒரு பெரிய செலபிரிட்டியை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி நிகழ்ச்சியை மீண்டும்  விறுவிறுப்பாக்கும் திட்டத்தில் இருக்கிறார் பிக்பாஸ் என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments