குணமா சொல்லனும் போனை உடைக்க கூடாது – சிவக்குமாரை கலாய்த்த நெட்டிசன்ஸ்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (13:29 IST)
நடிகர் சிவக்குமார் தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவக்குமார் ஒரு தனியார் நிறுவன சிறப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த போது அவரோடு சேர்ந்து செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ஒரு இளைஞரின் செல்பொனை கோபத்தில் கீழே தட்டிவிட்டார். அதிர்ச்சியடைந்த ரசிகர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். இந்த சம்பவம் அந்த இடத்தில் அசதாரணமான சூழ்நிலையை உருவாக்கியது.

இதனையடுத்து சமூக வலைதலங்களில் வேகமாக பரவிவரும் இந்த வீடியோவின் மூலம் நெட்டிசன்ஸ் சிவக்குமாரை கோபமாக கேலி செய்து வருகின்றனர். ஆனால் இன்னொரு சாரார் ஒருவரின்  அனுமதியின்றி அவரை புகைப்படம் எடுப்பது அந்த நபருக்கு எரிச்சலையே ஏற்படுத்தும் எனவே சிவக்குமார் செய்தது சரியே என்று வாதிட்டு வருகின்றனர்.

நட்சத்திர மோகத்தில் அலையும் நம் ரசிகர்களுக்கு இதுபோன்ற செயல்களாவது புத்தியைக் கொண்டுவருமா என தெரியவில்லை. என்னதான் இருந்தாலும் இதுபோல அத்துமீறும் ரசிகர்களிடம் பொறுமையாக எடுத்து சொல்லி தடுத்திருக்கலாம் என நடுநிலையாளர்கள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

அடுத்த கட்டுரையில்
Show comments