Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிங்க் vs நேர்கொண்ட பார்வை – என்னென்ன மாற்றங்கள் ? எப்போது ரிலிஸ் ?

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (11:08 IST)
தமிழில் ரீமேக்காகி வரும் பிங்க் படத்தை அப்படியேப் படமாக்காமல் அதில் சில மாற்றங்கள் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டி ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் பிங்க். இதில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்திய அளவில் இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகப் பாராட்டுகள் குவிந்தன. இதனை தற்ப்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் ரீமேக் செய்துவருகிறார்.

அஜித், அமிதாப் நடித்த கேரக்டரில் நடித்து வரும்  இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை எனப் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தி பிங்கை அப்படியே ரீமேக் செய்யாமல் அதில் சில மாற்றங்களை செய்து படமாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முன்னர் அறிவித்தப்படி படம் மே 1 ரிலிஸில் இருந்து தள்ளிப்போகவுள்ளதாகவும் தெரிகிறது.

விஸ்வாசம் படத்தின் அமோக வரவேற்பை அடுத்து இன்னமும் சில தியேட்டர்களிலும் ஸ்ட்ரிமிங்க் இணையதளங்களிலும் பரவலான வரவேற்பைப் பெற்று வருவதாலும் நேர்கொண்ட பார்வைத் தள்ளிப் போகும் என தெரிகிறது. அஜித்துடன் இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சி உடையில் அழகுப் பதுமையாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ 5 நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

ஆண்கள் எல்லாம் அழிஞ்சு போங்க.. நாசமா போங்க.. பாடகி சின்மயி சாபம்..!

கங்குவா தோல்வி… சிறுத்தை சிவாவுக்குக் கைகொடுக்கும் முன்னணி நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments