Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளி வைக்கபப்ட்ட நெஞ்சுக்கு நீதி டீசர் வெளியீடு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:02 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக இருந்தது.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலிஸுக்கான பணிகள் தொடங்க உள்ளன.

உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக ஆனதற்குப் பின்னர் வெளியாக உள்ள முதல் திரைப்படம் என்பதால் இதன் மீது பெரும் நம்பிக்கையில் இருக்கிறாராம். இந்நிலையில் படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் மார்ச் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் வீடியோவை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவை ஒட்டி இந்திய சினிமாவினர் துக்கம் அனுசரித்து வருவதால் டீசர் வெளியீட்டை ஒத்தி வைப்பதாக நெஞ்சுக்கு நீதி படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments