Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினேகா குழந்தைக்கு பெயர் தேர்வு

சினேகா குழந்தைக்கு பெயர் தேர்வு
, சனி, 29 ஆகஸ்ட் 2015 (15:31 IST)
புன்னகை அரசி சினேகாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது சினேகாவும்,அவரது குழந்தையும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இந்நிலையில், தனது குழந்தைக்கு  பெயர்  வைக்க பிரசன்னாவும் பெற்றோரும், உறவினர்களும் பல பெயர்களை பரிசீலித்து வந்துள்னர். தற்போது குழந்தைக்கு ‘விகான்’ என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமிக்கு பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது  நான் பிரசன்னாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தனது குழந்தைக்கு ‘விகான்’ என்று பெயர் வைக்கப்போவதாக தெரிவித்ததாக  சீனுராமசாமி தனது டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார் .இந்த டுவிட்டை பிரசன்னாவும் ரீடுவிட் செய்து உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் எனது குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா வைக்க பிரசன்னா முடிவு செய்துள்ளனர். இந்த விழாவிற்க்கு தமிழ் திரையுலகினருக்கு  அழைப்பு விடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
 

Share this Story:

Follow Webdunia tamil