Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலருடன் பகவதி அம்மனை தரிசித்த நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (13:00 IST)
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான். 
 
ஹீரோக்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் நேற்று மாலை கன்யாகுமாரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அங்குள்ள கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பகவதி அம்மன் சன்னதி, தர்ம சாஸ்தா சன்னதி, சூரிய பகவான் சன்னதி ஆகிய ஸ்வாமிகளை மிகுந்த பக்தியுடன் வழிபட்டார் நயன். நயன்தாரா அடுத்ததாக ஆர்.ஜெ பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி அம்மன் கோவில் நடக்கவிருப்பதால் தற்போது அதே கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments