Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் முன்னாள் காதலர்களிடம் ஏன் எதுவுமேக் கேட்பதில்லை?… நயன்தாரா ஆவேசம்!

vinoth
திங்கள், 18 நவம்பர் 2024 (12:03 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாகி இன்று நெட்பிளிக்ஸில் ரிலீஸாகியுள்ளது.

இந்த திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் தாமதமாக இந்த வீடியோ வெளியாக நடிகரும் நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ்தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டினார். நானும் ரௌடிதான் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்ட நிலையில் 2 ஆண்டுகளாக அதற்கு அனுமதிக்காமல் இழுத்தடித்தார் என்று கூறினார். இந்த சர்ச்சைகளால் கடைசி நேரத்தில் இந்த ஆவணப்படத்தின் மீது ஒரு செயற்கையான எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது ஆவணப்படம் ரிலீஸாகியுள்ள நிலையில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி நயன்தாரா பேசியுள்ளார். அதில் “நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்களோடு ஏன் முறிவு ஏற்பட்டது என்று ஊடகங்கள் கேள்விக் கேட்பதில்லை. அவர்களாகவே ஒரு கதையை உருவாக்கி நம்பத் தொடங்கி விடுகிறார்கள். கடைசியில் இந்த உலகில் யாருமே காதலிக்காதது போலவும் நான் மட்டுமே காதலித்தது போலவும் பேசுகிறார்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments