Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேன் இந்தியா படத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா & நயன்தாரா!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (12:11 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில் சமீபகாலமாக மும்பையில் அதிகமாக தங்கியிருக்கும் சூர்யா, விரைவில் நேரடி பாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் சிலரை சந்தித்து அவரின் மனைவி ஜோதிகா கதைகேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதில் பாலிவுட்  இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தி படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  மிகப்பிரம்மாண்டமாக பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments