Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இடையில் சினிமாவை விட்டு விலகியது என் முடிவல்ல.. என் முன்னாள் காதலரின் நிர்ப்பந்தம்- நயன்தாரா!

vinoth
செவ்வாய், 19 நவம்பர் 2024 (09:14 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy tale’ ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது ரிலீஸாகியுள்ளது.

இந்த திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் தாமதமாக இந்த வீடியோ வெளியாக நடிகரும் நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ்தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டினார். நானும் ரௌடிதான் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்ட நிலையில் 2 ஆண்டுகளாக அதற்கு அனுமதிக்காமல் இழுத்தடித்தார் என்று கூறினார். இந்த சர்ச்சைகளால் கடைசி நேரத்தில் இந்த ஆவணப்படத்தின் மீது ஒரு செயற்கையான எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது டாக்குமெண்ட்ரி வெளியாகியுள்ள நிலையில் இதில் நயன்தாரா தன்னுடைய முதல் காதல்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் இடையில் சினிமாவில் இருந்து விலகியது என்னுடைய முடிவல்ல. என்னுடைய முன்னாள் காதலரின் முடிவு. நான் திடீரென்று ஒரு நாள் இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது என வற்புறுத்தப்பட்டேன். அதற்கான காரணம் என்ன என்று கூட எனக்கு சொல்லப்படவில்லை. அப்போது நான் முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் இருந்தேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments