Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

vinoth
வியாழன், 15 மே 2025 (10:48 IST)
சில ஆண்டுகள் முன்னர் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இதையடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம்  உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க, இயக்குனராக சுந்தர் சி ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங், பிரம்மாண்டமான பூஜையோடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மூக்குத்தி அம்மனாக ஒரு வேடத்திலும், காவல்துறை அதிகாரியாக இன்னொரு வேடத்திலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரை சீருடை அணிந்த காவல்துறை அதிகாரியாக நயன்தாரா படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் ஸ்ருதிஹாசன்… கண்கவர் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான போஸில் கலக்கும் மாளவிகா மோகனன்!

ரஜினியின் விண்டேஜ் டான்ஸை அந்த பாடலில் பார்க்கலாம்… சிக்குடு அப்டேட் கொடுத்த அனிருத்!

வெற்றிமாறனின் சிரிப்பால்தான் ‘அட்டகத்தி’ படமே ரிலீஸானதா?... இயக்குனர் ராம் பகிர்ந்த தகவல்!

ரஜினியின் குட்டிக்கதை கேட்கத் தயாரா?... கூலி படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments