லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் படத்தின் டைட்டில்?

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (08:00 IST)
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும், இந்த படத்தை மிலண்ட் ராவ் என்ற இயக்குனர் இயக்க உள்ளார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு ’நெற்றிக்கண்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதே டைட்டிலில் கடந்த ஆண்டு 1981ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா இணைந்து நடித்த ஒரு படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
த்ரில், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
 
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’தர்பார்’, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ’சயிர நரசிம்மரெட்டி’, தளபதி விஜயுடன் ’பிகில்’ உள்பட ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments