மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடிக்கும் நயன்தாரா!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (11:04 IST)
நயன்தாரா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

நடிகை நயன்தாரா கதாநாயகி பாதித்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள நடிக்க ஆரம்பித்தது மாயா படத்தின் வெற்றிக்குப் பின்னர்தான். அந்த படத்துக்குப் பின்னர் அறம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து அவர் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னர் செலக்ட்டிவ்வாக படங்களை தயாரித்து வந்த நயன்தாரா இப்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்த லாக்டவுன் சமயத்தில் மட்டும் 8க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும், அதில் இரண்டு படங்கள் டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில வாரங்களும் கோயம்புத்தூரில் சில வாரங்களும் நடக்க உள்ளது. குடும்ப த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க உள்ளார்களாம். இதற்காக நயன்தார மொத்தமாக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழக திரையரங்க விநியோகத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’!

பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

கென் கருணாஸ் இயக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!

மகுடம் படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு விலகினாரா?... உண்மையில் நடந்தது என்ன?

போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments