நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (09:33 IST)
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன அன்னபூரணி படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது புதிதாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தை பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதைக்களம் ஊட்டியில் நடப்பது போல உருவாக்கப்பட்டது. ஆனால் நயன்தாரா ஊட்டிக்கு வர முடியாது என சொல்லிவிட்டதால் சென்னையிலேயே  திராட்சை தோட்டம் செட் ஒன்றை அமைத்து படமாக்கி வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடந்து வந்த நிலையில் இப்போது ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மீதமுள்ளதாக சொல்லப்படுகிறது. அதை விரைவில் முடித்து விட்டு ரிலீஸ் பணிகளைத் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments