Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஷின் டாக்ஸிக் படத்தில் இணைந்த நயன்தாரா!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (14:49 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை யாஷ் தொடங்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. யாஷின் சகோதரி வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பெங்களூருவில் நடந்து வருகிறது. நயன்தாரா இல்லாமல் படத்தில் கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியாவும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments