நயன்தாராவின் ‘கோல்ட்’ அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (15:55 IST)
நயன்தாரா நடித்த மலையாள திரைப்படமான ‘கோல்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒரு முறை அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 
நயன்தாராவின் ‘கோல்ட்’ திரைப்படம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
 
பிரித்திவிராஜ் நயன்தாரா நடித்த ‘கோல்ட்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments