Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்சேதுபதியுடன் மோத நயன்தாரா முடிவா?

விஜய்சேதுபதியுடன் மோத நயன்தாரா முடிவா?
, வியாழன், 2 மார்ச் 2017 (06:24 IST)
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நடித்த 'டோரா' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் அஜித், விஜய் படங்களுக்கு இணையாக பத்தே நாட்களில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.




இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று இரவு 8 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அனேகமாக இம்மாதம் 31ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே தேதியில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சற்குணம் அவர்களின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா , தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஆரோ சினிமா இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவர்பாண்டி' டப்பிங்கில் தனுஷை கலாய்த்த டிடி-ரோபோசங்கர்