Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் நயன்தாராவின் புதிய ரிலீஸ்: ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (07:35 IST)
நயன்தாரா முதல்முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'ஐரா'. குறிப்பாக கருப்பு நயன்தாரா கேரக்டர் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கேரக்டர் என்பதால் அந்த கேரக்டருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'மேகதூதம்' என்ற பாடல் வெளியானது. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டாகிய நிலையில் இந்த வாரம் இரண்டாம் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். இந்த பாடலும் முதல் பாடல் போலவே அனைத்து தரப்பினர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வரும் மார்ச் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படத்தை இயக்கிய சர்ஜூன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 'விஸ்வாசம்' படத்தை அடுத்து நயன்தாராவுக்கு இந்த படம் இந்த ஆண்டின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments