Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்குத்தி அம்மன் 2.. நயன்தாராவின் அலப்பறையால் லொக்கேஷனை மாற்றிய சுந்தர் சி!

vinoth
வெள்ளி, 28 மார்ச் 2025 (09:56 IST)
சில ஆண்டுகள் முன்னர் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இதையடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம்  உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க, இயக்குனராக சுந்தர் சி ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங், பிரம்மாண்டமான பூஜையோடு தொடங்கியது.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சுந்தர் சிக்கும் நயன்தாராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கை பொள்ளாச்சியில் நடத்த திட்டமிட்டாராம் சுந்தர் சி. ஆனால் நயன்தாரா சென்னையிலேயே வைக்கவேண்டும் என்று கூறிவிட்டாராம். தன் மகன்களைத் தான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனால் வெளியூர் ஷூட்டிங் வரமுடியாது என சொல்லிவிட்டதாகவும், அதனால் சென்னையிலேயே சுந்தர் சி ஷூட் நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

சாதரண கடைக்காரன்தான்.. ஆனா குடும்பம்னு வந்துட்டா..! - வீர தீர சூரன் திரைவிமர்சனம்!

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments