Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஜோடியாக முதல்முறையாக நடிக்கும் நயன்தாரா

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (08:15 IST)
தளபதி விஜய்யுடன் முதல்முறையாக 'வில்லு' படத்தில் ஜோடி சேர்ந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது 'தளபதி 63' படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் இன்னும் ஓரிரு நாட்களில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் 'நோட்டா' படத்தில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த தமிழ்ப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா, இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் விஜய் தேவரகொண்டாவுடன் முதல்முறையாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அஜித்தின் 'விஸ்வாசம்' என்ற வெற்றிப்படத்தில் நடித்துள்ள நயன்தாரா நடிப்பில் உருவான 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது மேலும் அவர் நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்', 'சயிர நரசிம்மரெட்டி', 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய திரைப்படங்களும் இவ்வருடம் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments