Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் 62வது படத்தில் ஜோடி போடும் நயன்தாரா

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (13:48 IST)
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து, தற்போது 62-வது படத்தின் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹிரோயினாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

 
இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க போகிறாராம். இதுவரை இதுகுறித்து உறுதியான தகவல்கள் கிடைக்காமல் இருந்த  நிலையில், தற்போது விஜய்யின் 62-வது படத்தை நான் தான் இயக்கப் போவதாக கூறியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுகுறித்து பேசிய அவர், “ஸ்பைடர் பட வேலைகளைப் பார்த்துக் கொண்டே, விஜய்யின் 62 வது படத்திற்கான முதற்கட்ட பணிகளையும் தொடங்கி விட்டேன். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களை மாதிரி இல்லாமல் விஜய்யை வேறொரு கோணத்தில் இப்படத்தில் காணலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
 
மெர்சல் படம் பல எதிர்ப்புகளை  தாண்டி மிகப் பெரிய வெற்றியடைந்தது. விஜய் முதன் முதலில் மூன்று ரோலில்  நடித்திருந்தார். தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவுள்ள இப்படத்தில் விஜய் 2 ரோலில் நடிக்க இருப்பதாக  கூறப்படுகிறது. மெர்சல் படம் போல இந்த படமும் ஒரு சமூக பார்வை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு நாயகியாக நயன்தாராவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும்  கூறப்படுகிறது. 
 
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸின் ஸ்பைடர் படம் தோல்வியடைந்ததால் இப்படம் அவருக்கு சவாலாக இருக்கும் என்றும்  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments